வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்தவர் நந்த குமார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் நிவேதினி. 14 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். வழக்கம் போல பள்ளிக்கு சென்றவர் வகுப்பறையில் அமர்ந்து சக மாணவிகளுடன் பாடம் படித்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மாணவி மயங்கி விழுந்தார். அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் மாணவி பேச்சு மூச்சின்றி இருந்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவியை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாணவி வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் மாணவி இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பெற்றோரும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மர்ம முறையில் மாணவி மரணமடைதிருப்பதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் பள்ளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: ஓ.பி.எஸ் மகன் கார் மீது சரமாரி தாக்குதல்..! தேனியில் பரபரப்பு..!