சோளம் வாங்க வந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்த வாலிபர்? பொதுமக்கள் சரமாரி தாக்குதல்
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பெண்ணின் கையை பிடித்ததாக கூறி இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆம்பூர் அடுத்த அய்யனுர் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவர் அப்பகுதியில் மக்காச்சோளம் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் கிரிசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மக்காசோளம் வாங்க வந்துள்ளார். மக்காசோளம் வாங்கும்போது விலை பேரம் பேசுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த இளைஞர் பெண்ணின் கையை பிடித்து இழுத்தாக கூறி அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அந்த இளைஞரை தாக்கியுள்ளனர்.
வேலூரில் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களிடம் கஞ்சா விற்பனை; 7 பைக்குகள் பறிமுதல், ஒருவர் கைது
பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் விரைந்து வந்து அந்த இளைஞரை பொது மக்களிடம் இருந்து மீட்க முயன்ற போது பொதுமக்கள் காவல் துறையினருடன் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.