வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் வேலூரில் பரபரப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திடீரென வானில் இருந்து விழுந்த மர்ம பொருளால் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், காவல் துறையினர் அதனை பத்திரமாக எடுத்துச் சென்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சிக்கு உட்டபட்ட பகுதியில் மோர்தானா கால்வாய் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று கீழே விழுந்துள்ளது. அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உனடியாக அப்பகுதிக்கு வந்து பார்த்தனர்.
அதில் பறக்கும் பாராசூட் போன்ற ஒன்றும், அதன் அருகில் சிறிய அளவிலான பெட்டி ஒன்றும் இருந்ததைக் கண்டனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் உடயடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கீழே விழுந்த பொருள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
திருவண்ணாமலையில் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மர்ம பொருளில் இருந்த சிறிய அளவிலான பெட்டியில் மத்திய அரசின் தேசிய வானிலை ஆய்வு மையம், சென்னை மீனம்பாக்கம் என்ற முகவரி இடம் பெற்றிருந்தது. அதில் ஒரு செல்போன் நம்பரும் இருந்த நிலையில், அதனை தொடர்பு கொண்ட போது அது வானிலை ஆராய்ச்சி மையத்தின் வானிலை ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்டது என்பது தெரிய வந்தது.
விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் அணைக்கட்டுக்கு சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி
இதனைத் தொடர்ந்து கீழே விழுந்து கிடந்த பொருட்களை காவல் துறையினர் பாதுகாப்பாக சேகரித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். வானில் இருந்து திடீரென மர்ம பொருள் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.