Lok Sabha Election 2024: கடவுளே.. 3வது முறையாக மோடி பிரதமராகனும்.. முருகனிடம் மனமுருகி வேண்டிய எஸ்.ஜி. சூர்யா!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் ஊடகங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
பிரதமராக நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்க வேண்டுமென மாநில செயலாளர் எஸ். ஜி.சூர்யா வள்ளி மலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் ஊடகங்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது. அதில் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: நாளை எலக்சன் ரிசல்ட்! பாஜக முகவர் என்ன செய்ய வேண்டும்? லிஸ்ட் போட்டு அலர்ட் செய்யும் அண்ணாமலை!
இதனிடையே, வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதை யொட்டி, மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர வேண்டும் என கோயிலில் வழிபட்டேன். வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி இதனை நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
கோவையில் பாஜக கட்டாயம் வெல்லும். எதிர்க்கட்சிகாரர்களே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் வெல்வார் என்று கூறுகின்றனர். தமிழகத்தில் பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெறுவதற்கு சாத்தியம் உள்ளது. குறிப்பாக, கோவை, நெல்லை, வேலூர், தருமபுரி, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறவுள்ளது.
மேலும் பேசிய அவர், கன்னியாகுமரியில் பிரதமர் தியானம் செய்வதில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். இதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். பிரதமர் மோடி, 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக அமோக வெற்றி அடைந்து, பாரத பிரதமராக மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்ந்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வார் எனக்கூறினார்.