தமிழக வருமான வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருப்பவர் வீரமணி. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் நெமிலியில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அங்கு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு உரையாற்றினார்.

பின்னர் காரில் ராணிப்பேட்டை நோக்கி மற்றொரு நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒருவர் விபத்தில் சிக்கி காயம்பட்டு கிடந்தார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்திய அமைச்சர் வீரமணி காயமடைந்தவரிடன் விசாரணை மேற்கொண்டார். அவர் கரியாக்குடல் பகுதியைச் சேர்ந்த கோட்டி என்பது தெரியவந்தது.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸிற்காக காத்துக்கொண்டிருந்தார். இதையறிந்த அமைச்சர் உடனடியாக தன்னுடன் வந்த அதிமுகவினரின் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மருத்துவமனையில் அவருக்கு தற்போது சிகிச்சை நடந்து வருகிறது.