தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தில் கூட்டுறவுத்துறையில் கடன் வாங்கக் கூடாது - மக்களுக்கு அமைச்சர் அறிவுரை
எப்பொழுதும் கூட்டுறவுத் துறையில் கடன் தள்ளுபடியாகும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் கடனை பெறக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இவ்விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட திரளான பொதுமக்களும் பங்கேற்றனர்.
இவ்விழாவில் கூட்டுறவு உறுதிமொழி எடுக்கப்பட்டு பின்னர் பயனாளிகளுக்கு ரூ.17.42 கோடி மதிப்பில் கடனுதவிகளை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், கடனை நாங்கள் கொடுகிறோம். அதனை திருப்பி கட்ட வேண்டும் என்பதை விட ரத்து செய்ய வேண்டும் என்ற கோஷம் தான் அதிகம் உள்ளது.
தருமபுரியில் சிறுமியை கர்ப்பமாக்கிய சிறப்பு காவல் ஆய்வாளர் போக்சோவில் அதிரடி கைது
அப்படி இருந்தால் துறையும் நிற்காது, அரசாங்கமும் நிற்காது. நீங்கள் வாங்கிய கடனை கட்ட வேண்டும். ஆனால் சேட்டிடம் கடன் வாங்கினால் மட்டும் கடனை கட்டுகிறீர்கள். சும்மா நகையை வைத்து பணத்தை சும்மா வாங்கி சென்றுவிட்டீர்கள். என்னுடைய தாழ்மையான கோரிக்கை கடனை வாங்கினால் அதனை திருப்பி கட்ட வேண்டும். ஆனால் கடனை வாங்குவோம் தள்ளுபடி செய்வார்கள் என்ற எண்ணத்தில் கூட்டுறவுத்துறையில் கடனை வாங்குகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதிக அளவில் கூட்டுறவுத்துறை பகுதி நேர நியாய விலைகடைகளை திறந்துள்ளனர். பாராட்டுகிறோம் இன்றைக்கு 2547 பேருக்கு கடனாக ரூ,.17.42 கோடி அளிக்கிறோம். அது எள்ளு என்றால் என்னவென்றால் நீங்கள் எள்ளை கேட்டால் எண்ணெய்யாக கொடுப்பார் கூட்டுறவுத்துறை. அதை தான் சொன்னேன் வாங்கினால் கடனை சரியாக கட்டுங்கள் என பேசினார்.