சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கும் குருவாளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கலா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அங்கிருக்கும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த இவர்களின் மூத்த மகள் ப்ரியாவை மணி என்கிற வாலிபர் காதலித்து வந்திருக்கிறார்.

இவர் தாராபுரம் ஊராட்சி பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே ப்ரியாவை திருமணம் செய்திருக்கிறார்.இதையடுத்து மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த மணிக்கு, ப்ரியாவின் தங்கை ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 16 வயது சிறுமி மீது ஆசை வந்திருக்கிறது. ராதா, அங்கிருக்கும் ஒரு பள்ளியில் தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறார். அக்காவை பார்க்க வரும் ராதாவை ஆசை வார்த்தைகள் கூறி மணி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இந்தநிலையில் தற்போது ராதா 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் மணி மீது அங்கிருக்கும் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அவர்களின் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.