Big Breaking: கள்ளக்குறிச்சியில் பயங்கரம்….. பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உடல் சிதறி பலி…. 10
பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. 4 பேர் உடல் சிதறி பலியான நிலையில் 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டதில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. 4 பேர் உடல் சிதறி பலியான நிலையில் 10-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே புத்தம் புது பட்டாசு கடைகள் முளைத்துள்ளன. உரிய அனுமதி பெறாமலும் பல இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுளதாக புகார் கூறப்படுகிறது. இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் முருகன் என்பவர் பட்டாசு கடை போட்டிருந்தார். அந்த கடையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பெரிய கடையில் இருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த கடைகளுக்கும் தீ பரவியது. பட்டாசு கடைக்கு அருகில் இருந்த பேக்கரிக்கு தீ பரவியதை அடுத்து அங்கிருந்த சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்ததது. சுமார் நூறு மீட்டர் உயரத்திற்கு தூக்கி எறியபட்ட சிலிண்டருடன் பட்டாசுகளும் வெடித்துச் சிதறியதால் அப்பகுதியே போர்க்கலம் போல் காட்சியளித்தது.
இந்த கோர விபத்தில் உடல் சிதறி நான்கு பேர் பலியாகியுள்ளனர். தீயில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்பட்ட இடத்தில் ஏராளமான வாகனங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
பட்டாசு கடையில் சுமார் நூறு அடி உயரத்திற்கு எரிமலைக் குழம்புகள் போல் தீச்சுவாலைகள் எழும்பிய காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு கடைகள் வைத்திருந்தால் உடனடியாக கடைக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.