ராணிப்பேட்டை  மாவட்டம் அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரதுமகள்  அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் (24) என்ற இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 

ராணிப்பேட்டையில் காதலை பெற்றோர்கள் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த வேலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரதுமகள் அதே பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த கதிர்வேல் (24) என்ற இளைஞர் கேட்டரிங் படித்து விட்டு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 

இந்நிலையில், திருமணம் செய்து கொள்ள கதிர்வேல் காதலியின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார். ஆனால், இதற்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மாணவி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலி இறந்த செய்தியை அறிந்த காதலன் கதிர்வேலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்த வீட்டில் வசித்துவந்த காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.