100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த லாரி... 2 பேர் உயிரிழப்பு..!
குடியாத்தம் அருகே மலைப் பாதையில் லாரி சென்றுக்கொண்டிருந்த போது வளைவில் வேகமாக திரும்பியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்
குடியாத்தம் அருகே மலைப் பாதையில் லாரி சென்றுக்கொண்டிருந்த போது வளைவில் வேகமாக திரும்பியதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆந்திராவில் இருந்து விறகு ஏற்றிக் கொண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் நோக்கி லாரி வந்துக்கொண்டிருந்தது. அப்போது, பேர்ணாம்பட்டு அடுத்துள்ள பத்தலபல்லி மலை பாதையில் சென்றுக் கொண்டிருந்தது.
நள்ளிரவில் 3-வது கொண்டை ஊசி வளைவில் லாரியை வேகமாக திருப்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்து கொண்டு சுமார் 100 அடி பள்ளத்தில் தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிவா, கிளினர் பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரியை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பத்தலபல்லி மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் இரவு நேரத்தில் ஒளியை பிரதிபளிக்கும் எச்சரிக்கை பலகை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.