வேலூர் அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட குழந்தை! 8 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை! குவியும் பாராட்டு.!
வேலூர் மாவட்டம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுந்தர் மற்றும் சூரியகலா என்ற தம்பதியருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாய்க்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பச்சிளம் ஆண் குழந்தையை கடத்திய 8 மணி நேரத்தில் மீட்டு, கடத்திய பெண்ணையும் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுந்தர் மற்றும் சூரியகலா என்ற தம்பதியருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் நேற்று இரவு தாய்க்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஆண் குழந்தையை யாரோ திருடி சென்று விட்டனர்.
இதையும் படிங்க;- உங்க தாத்தாவையே பாத்தவங்க நாங்க! உதயநிதி இந்த வேலை எல்லாம் இங்கே வேண்டாம்! சீறும் சி.வி.சண்முகம்..!
இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, 4 தனிப்படைகள் அமைத்து குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு குழந்தையை வைத்திருந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க;- தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா.. இளைஞரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த தம்பதி..!
இதனையடுத்து, அவரை காவல் நிலையத்து அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் ஆண் குழந்தையை திருடியவர் என்பதும் அவர் ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையை மீட்டு காவல்துறையினர் பெற்றோர்களிடம் ஒப்படைத்ததுடன் குழந்தை திருட்டில் ஈடுபட்ட பத்மாவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை திருடு போன 8 மணி நேரத்தில் காவல் துறையினர் குழந்தையை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்ததை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க;- மருமகளை மடக்க நினைத்த மாமனார்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்! உனக்கு சொத்து பணம் தரம் சொல்லி டார்ச்சர்.!