கொளுத்திப்போட்ட துரைமுருகன்... சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல ஜோலார்பேட்டையில் எதிர்ப்பு..!
தண்ணீர் பற்றாக்குறையால் அவதியடைந்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்ல ஜோலார்பேட்டையில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறையால் அவதியடைந்து வரும் நிலையில் சென்னைக்கு குடிநீர் எடுத்து செல்ல ஜோலார்பேட்டையில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
\
சென்னையில் உள்ள ஏரிகள் நீரின்றி வறண்டதால், தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் எடுத்து செல்லும் பணிகளுக்கான சோதனை ஓட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.65 லட்சம் ஒதுக்கி உள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்படும் என அறிவித்த உடனேயே திமுக பொருளாளர் துரைமுருகன், இங்கிருந்து தண்ணீர் எடுத்தால் வேலூர் மாவட்டம் முழுவதும் பெரும் போராட்டம் வெடிக்கும்’’ என எச்சரித்து இருந்தார். துரைமுருகனின் இந்த பேச்சு சலசல்லபை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜோலார்பேட்டை கோடியூர் பகுதியில் கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகள் மூலம் சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்லும் வழி திருப்பி விடப்பட்டதால், ஜோலார்பேட்டையில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீரின்றி கடும் அவதிக்குள்ளாகி வருவதாக கூறி, அங்கு வசிக்கும் மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.