திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே இருக்கிறது வக்கணம்பட்டி கிராமம். இதை ஊரைச் சேர்ந்தவர் சண்முகம்(45). இவரது மனைவி வெற்றிச்செல்வி. இந்த தம்பதியினருக்கு சவுமியா என்கிற 8 வயது மகள் இருக்கிறார். செங்கல்பட்டில் இருக்கும் ரயில்வே பாதுகாப்பு படையில் காவலராக சண்முகம் பணியாற்றி வந்தார். சிறுமி சவுமியா அங்கிருக்கும் ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

ஜோலார்பேட்டை அருகே ஏசி வெடித்து போலீஸ்காரர், மனைவி படுகாயம்

நேற்று முன்தினம் இரவு உணவு அருந்திவிட்டு மூன்று பேரும் தூங்கச்சென்றனர். அவர்கள் தூங்கிய அறையில் ஏசி போடப்பட்டிருந்தது. அதிகாலையில் விழித்த மகள் சவுமியா சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும் என வெற்றிச்செல்வியை எழுப்பி இருக்கிறார். இதையடுத்து சிறுமியை வெற்றிச்செல்வி அழைத்து சென்றார். அப்போது அறையில் இயங்கிக்கொண்டிருந்த ஏசி திடீரென  பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் அறை முழுவதும் தீ பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது. பலத்த காயமடைந்த சண்முகமும் வெற்றி செல்வியும் வலியால் துடித்தனர். கழிவறை உள்ளே இருந்ததால் சிறுமி சவுமியா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

டிக் டாக்கால் சீரழிந்த குடும்பம்..! மனைவியின் தலையில் ஆட்டுக்கல்லை போட்டு கொன்ற கொடூர கணவன்..!

சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டநிலையில் சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வெற்றிச்செல்வியும் அடுத்து மரணமடைந்தார். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பெற்றோர் இருவரும் பலியாகிவிட, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி தற்போது ஆதரவின்றி இருக்கும் சிறுமியின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.