தமிழகத்தில் கடந்த மாதம் 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை வந்தது. ஆனால் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் அடுத்தடுத்து உருவாகிய புயல்களால் தமிழகத்தின் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு மழையின் தீவிரம் வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தற்போது மீண்டும் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வரும் 18 ம் தேதி வங்கக்கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பிருப்பதால் அடுத்து வரும் சில தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி, தேனி, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: காவு வாங்கிய விளம்பர வெறி..! அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்த விபத்தில் இளம்பெண்ணின் கால் அகற்றம்..!