அரசு பள்ளியில் மேசைகளை அடித்து உடைத்து மாணவர்கள் அட்டகாசம்.. சரியான ஆப்பு வைத்த ஆட்சியர்..!
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை விட நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, நடுரோட்டில் நடனமாடுவது, பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, ஆசிரியர்களை தாக்குவது, பைக் ரேஸ் போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் தொரப்பாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் பெஞ்ச், டெஸ்க்கினை உடைத்து அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலானதை அடுத்து 10 மாணவர்கள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் அட்டகாசம்
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களை விட நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பொது இடங்களில் மது அருந்துவது, புகைப்பிடிப்பது, நடுரோட்டில் நடனமாடுவது, பேருந்தில் படிக்கட்டில் தொங்கிய படி செல்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, ஆசிரியர்களை தாக்குவது, பைக் ரேஸ் போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் ரிக்கார்டு நோட்டு கேட்ட ஆசிரியரை மாணவர்கள் அடிக்க பாய்ந்து ஆபாசமாக பேசி மிரட்டினர். இந்த காட்சிகள் வைரலானதை அடுத்து 3 மாணவர்களை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
மேசைகளை அடித்து உடைத்த மாணவர்கள்
இந்நிலையில், வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 800 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்று செய்முறை தேர்வு தொடங்க உள்ளது. இதையொட்டி தொரப்பாடி பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கு நேற்று முன்தினம் மாலை வழக்கமான நேரத்தை விட ஒருமணி நேரம் முன்பாக பள்ளி விடப்பட்டது. ஆனால், 12-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
வைரல் வீடியோ
அவர்களை வீட்டுக்கு செல்லும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். மேலும், வகுப்பறையில் உள்ள இரும்பு மேசை, டெஸ்க்கு, பெஞ்சுகளை தரையில் போட்டும், காலால் எட்டி உடைத்து சேதப்படுத்தினர். இதுதொடர்பான காட்சிகள் வைரலானது. இதுதொடர்பாக ஆசிரியர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்ததை அறிந்த மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். மேலும், வேலூர் ஆர்டிஓ, வட்டாட்சியர், மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பில் மேசைகளை உடைத்த 10 மாணவர்களை மே 5ம் தேதி வரை தற்காலிகமாக நீக்கி ஆட்சியர் குமரவேல் பாண்டியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.