வேலூர் மாவட்டம் , திருப்பத்தூரை சேர்ந்தவர் தனசேகர் . தண்ணீர் கேன் விநியோகிக்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ராதா . இவர்களுக்கு ஒரு மகன் , மகள் உள்ளனர் . அதிகமான கடன் தொல்லையால் கடந்த சில மாதங்களுக்கு முன் தனசேகர் மாயமாகிவிட்டார் . இப்போது வரை வீடு  திரும்பவில்லை .

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் ராதாவை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர் . இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த ராதா வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் ராதாவின் சடலத்தை மீட்க வந்தனர் . அப்போது ராதா வளர்த்த நாய் , அவர் சடலத்தின் மீது தலை வைத்து படுத்து கொண்டது . பிணத்தின் அருகே யாரையும் நெருங்க விடாமல் சுற்றி சுற்றி வந்தது . ஒரு வழியாக அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர் .

வளர்த்த பாசத்திற்காக எஜமானரின் உடலை விட்டு அகலாத நாயின் பாசம் காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது .