கொரோனா பாதிப்பு எதிராக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளி கல்லூரியில் வணிக வளாகங்கள் திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் மது வாங்க டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எளிமையாக பரவக் கூடும் என்பதால் மாநிலம் முழுவதும் 18 மாவட்டங்களில் திரையரங்குகள் வணிக வளாகங்கள் மூட தமிழக அரசு உத்தரவிட உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் திரையரங்கில் வணிக வளாகம், மார்க்கெட், பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் பொதுமக்கள் என பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனா அச்சம் எதிரொலியாக பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் நோய் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்புக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் தொற்றுநோய் தடுப்பு பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் மட்டும் தான் திறந்து சர்வசாதாரணமாக மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

காலை 12 மணிக்கும் திறக்கும் மதுக்கடைக்கு காலை 10 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடை முன்பு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் மதுவிற்பனை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்பதற்காக கடைகளை மூட உத்தரவிடாமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே, டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் மனுத்தாக்கல் செய்துள்ளார்.