Asianet News TamilAsianet News Tamil

சுங்கச்சாவடிகளில் இலவசம்... விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் குஷி..!

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள், தங்களது சொந்த ஊரில் கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், பண்டிகை முடிந்து வருபவர்களுக்காக நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டது. 

chennai heavy traffic...tollgate charges free for today
Author
Vellore, First Published Jan 20, 2020, 11:50 AM IST

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து ஏராளமானோர் ஒரே நேரத்தில் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க பல சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் இலவசமாக அனுமதிக்கப்பட்டது. 

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள், தங்களது சொந்த ஊரில் கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில், பண்டிகை முடிந்து வருபவர்களுக்காக நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டது. 

chennai heavy traffic...tollgate charges free for today

இந்நிலையில், பண்டிகை விடுமுறையுடன் வார விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் இன்று முதல் வழக்கம்போல் செயல்பட உள்ளதால், சொந்த ஊர்களில் இருந்து லட்சக்கணக்கானோர் நேற்று காலையில் இருந்தே சென்னை திரும்பினர். இதனிடையே, ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் இருப்பதால் அதிலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனையடுத்து, பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக இன்று ஒரு நாள் மட்டும் சுங்கச்சாவடிகள் இலவச அனுமதிக்கப்பட்டது. 

chennai heavy traffic...tollgate charges free for today

இதற்கிடையே சென்னை வருபவர்களின் முக்கிய சந்திப்பான பெருங்களத்தூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சென்னை புறநகரில் இருந்து நகருக்குள் செல்வதற்கே பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios