liquor: மது பாக்கெட்டுகளை கடத்திய காரை 10 KM தூரம் விரட்டி பிடித்த சிங்கப்பெண்.. சினிமாவை மிஞ்சிய சேஸிங்..!
கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல் துறையினர் காரை சினிமா பாணியில் 10 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று நாட்றாம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகே காவல் ஆய்வாளர் தமிழரசி மடக்கி பிடித்தார்.
சட்ட விரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்திய நபரை காரில் 10 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளி மாநில மதுபாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பால கிருஷ்ணனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, மாவட்ட அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான காவல் துறையினர் நாட்றாம்பள்ளி, பச்சூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க;- Crime: ஒரே நேரத்தில் 75 வயது கிழவி, மகள் பலாத்காரம் செய்து கொலை.. செக்ஸ் சைக்கோ பகீர் வாக்குமூலம்..!
அப்போது, பச்சூர் சுங்கச்சாவடி அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, கர்நாடகாவில் இருந்து நாட்றாம்பள்ளி நோக்கி அதிவேகமாக வந்த காரை மடக்கினர். ஆனால், கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல் துறையினர் காரை சினிமா பாணியில் 10 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டிச் சென்று நாட்றாம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலை அருகே காவல் ஆய்வாளர் தமிழரசி மடக்கி பிடித்தார்.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் உல்லாசம்.. காதல் மனைவி துடிதுடிக்க கொலை.. ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தை.!
அப்போது கார் ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு இறங்கி தப்பியோட முயன்றார். அவரை விரட்டிச்சென்று காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் கர்நாடக மாநிலத்திலிருந்து 1,400 மதுபான பாக்கெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 80,000 ரூபாய் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, கார் ஓட்டி வந்த தாமேலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த வீரமணி (45) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து மது பாக் கெட்டுகள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பெண் காவல் ஆய்வாளரின் வீரச்செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.