கேட்டது 2... கிடைச்சது 3... வேலூருக்கு போனஸ் கொடுத்த முதல்வர் எடப்பாடி..!

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
 

Bonus for Vellore Edappady

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.Bonus for Vellore Edappady

கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதை தொடர்ந்து  தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்களை பிரித்து புதிதாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  இந்நிலையில், வேலூர், திருச்சியை அடுத்து பெரிய மாவட்டமாக உள்ள வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்தை பிரித்து புதிதாக அறிவிக்க வேண்டும் என வந்த கோரிக்கைகளை அடுத்து போனஸாக மூன்று மாவட்டங்களாக பிரித்து அறிவித்து இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Bonus for Vellore Edappady

வேலூர் மாவட்டம், அரக்கோணம் பார்டர் திருத்தனி முதல் திருப்பத்தூரை அடுத்த கந்திளி வரை 245 கிலோ மீட்டர் குறுக்கும் நெடுக்குமாக பெரிய மாவட்டமாக பரந்து விரிந்து கிடந்தது வேலூர் மாவட்டம். 13 சட்டமன்றத் தொகுதிகள், அரக்கோணம், வேலூர் என எம்.பி தொகுதிகளைக் கொண்டது.

அவ்வளவு பெரிய வேலூர் மாவட்டத்தை பிரித்து திருப்பத்தூரை மையமாகக் கொண்டு ஏலகிரி மாவட்டம் உருவாக்க வேண்டும். வேலூரில் இருந்து திருப்பத்தூர் 95 கிலோ மீர் தூரத்தில் உள்ளது. ஆகையால் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி,  குடியாத்தம், அணைக்கட்டு கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து புதிய ஏலகிரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன. Bonus for Vellore Edappady

வேலூர் மாவட்டத்தை  திருப்பத்தூர், அரக்கோணம் என மூன்று மாவட்டமாக பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி தனிமாவட்டமாக பிரிக்கப்பட்டபோதே சட்டப்பேரவையில் நல்லதம்பி எம்.எல்.ஏ திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது, அமைச்சர் கே.சி.வீரமணி ’உறுதியாக பிரிக்கப்படும்’ என அறிவித்து இருந்தார். இந்த நிலையில் 3 மாவட்டங்களாக பிரித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios