Asianet News TamilAsianet News Tamil

விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த கூலித்தொழிலாளி; உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய உறவினர்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்த மரம் ஏறும் கூலித் தொழிலாளி மூளைச்சாவடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை உறவினர்கள் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Body parts of a laborer who was brain dead in an accident in Tiruppathur were donated vel
Author
First Published Dec 25, 2023, 5:47 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் முருகானந்தன் (வயது 38). இவர் மரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி (26) என்ற மனைவியும், புவியரசு (3) மற்றும் கோபிநாத் என்ற கைக்குழந்தையும் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று காலை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக வேலைக்கு சென்றுள்ளார். மரத்தின் மீது ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 70 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். 

தமிழக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தவே மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை - துரைவைகோ குற்றச்சாட்டு

இந்த விபத்தில் தலையில் அடிப்பட்டதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் முருகானந்தனுக்கு மூளைச் சாவு  ஏற்பட்டு கோமா நிலையில் இருப்பதாகவும், இவரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என  மருத்துவர்கள் தெரிவித்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதை தொடர்ந்து தொழிலாளியின்   உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்துள்ளனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில் உடல் உறுப்பு தானம் செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு முருகானந்தனின்  உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

கை குழந்தையுடன் தவித்து நிற்கும் கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios