ராணிபேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இரு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி சௌந்தர்யா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. மூத்த மகளைத் தவிர மீதமுள்ள ஒரு ஆண் குழந்தை மற்றும் மகள் ஆகியோருக்கு மனவளர்ச்சி குன்றியதாக கூறப்படுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் காரணமாக சௌந்தர்யாவின் உறவினர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வகையில் சௌந்தர்யாவுக்கு மன உளைச்சல் அளித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று கடும் மன உளைச்சலில் இருந்த சௌந்தர்யா தனது இரண்டாவது மகள் மற்றும் ஆண் குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி? அமைச்சர் பதில்

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மூவரையும் மீட்டு வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்து மூவரும் வேலூரில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆற்காடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.