திருவண்ணாமலை மாவட்டம் பனையூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் ஜெயக்குமார் . விவசாயம் பார்த்து வருகிறார் . இவருடைய நண்பர் ஜெய்கணேஷ் . இருவரும் சேர்ந்து ஒரு ஆம்னி காரில் வேலூர் சென்றிருக்கின்றனர் . அவர்கள் பயணம் செய்த கார் கியாஸ் வசதி உடையது.

அங்கு ஒரு வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு நேரத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர் . வேலூரை அடுத்த சத்திய விஜயநகரத்தை கடந்து வந்துகொண்டிருந்த போது  திடீரென கியாஸ் கசிந்ததால் காரில் தீப்பற்றிக் கொண்டது . புகை வருவதை பார்த்ததும் ஜெயக்குமார் மற்றும் ஜெயகணேஷ் இருவரும் காரில் இருந்து இறங்கி ஓடினர் .

கியாஸ் என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்து சிறிது நேரத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது . சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைத்தது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .