Asianet News TamilAsianet News Tamil

சாலையில் பணி செய்துகொண்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள்; திடீரென மோதிய லாரியால் 4 பேர் படுகாயம்

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர்கள் மீது லாரி மோதிய விபத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 persons highly injured road accident at tirupattur district vel
Author
First Published Oct 31, 2023, 11:01 AM IST | Last Updated Oct 31, 2023, 11:01 AM IST

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து நெக்குந்தி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் போன்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியில்  திருவண்ணமலையைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 10 பேர் ஈடுபட்டிருந்ததனர். அப்போது  புனேவில் இருந்து  பைப்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி நிலை தடுமாறி  பணியில் ஈடுபட்டவர்கள் மீது  வேகமாக மோதி சாலையின் குறுக்கே லாரி கவிந்து  விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் குள்ளகுடி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(வயது 49), அண்ணாமலை(48), முருகன்(48) லாரியில் பயணம் செய்த தன்வே பூஜா(20) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உடனடியாக சக ஊழியர்கள் அவர்களை  மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios