திருப்பத்தூரில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பிய பாஜகவினர் மீது தாக்கதல்; தலைமறைவாக இருந்த மூவர் அதிரடி கைது
ஆம்பூர் அருகே தனியார் தாபாவில் உணவு அருந்தி கொண்டிருந்த போது ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்ட பாஜக மாவட்ட செயலாளரை தாக்கிய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகின்ற 31 மற்றும் பிப்ரவரி 1ம் தேதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரை நடத்துவதற்காக வருகின்றார். இந்நிலையில் அண்ணாமலையை வரவேற்க வேலூர் மாவட்ட பாஜகவினர் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதன்படி ஆம்பூர் அடுத்த குளிதிகை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள வடமாநிலத்தவர்கள் நடத்தி வரும் தாபா அருகே அண்ணாமலையை வரவேற்க பேனர் வைக்க வேலூர் மாவட்ட பாஜக செயலாளர் லோகேஷ் குமார் என்பவர் நேற்று இரவு ஆய்வு செய்துள்ளார்.
பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சியளிக்கும் நீலகிரி; கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி
பின்னர் தாபாவில் பாஜகவினர் நிர்வாகிகளுடன் உணவு அருந்த சென்றுள்ளார். அப்பொழுது லோகேஷ் குமார் மற்றும் பாஜகவினர் திடீரென தாபாவில் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டுள்ளனர். அப்பொழுது பாஜகவினருக்கும், தாபாவில் உணவு அருந்தி கொண்டிருந்த வேலூர் மாவட்டம் வளத்தூர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், வசீம், பாபு ஆகிய மூன்று இளைஞர்களிடையே வாய்தகராறு, ஏற்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழக வீரர்கள்- சீமான் அதிரடி
இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மூன்று பேரும் பாஜக மாவட்ட செயலாளர் லோகேஷ் குமார் மற்றும் அவருடன் வந்த பாஜக நிர்வாகியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் லோகேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லோகேஷ்குமாரை தாக்கி விட்டு தலைமறைவாக இருந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.