தண்ணீர் தேடி வந்த புள்ளிமான்களுக்கு நேர்ந்த பரிதாபம்..! சமூக ஆர்வலர்கள் வேதனை..!

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை புள்ளிமான்கள் கூட்டம் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவற்றின் மீது பயங்கரமாக மோதியுள்ளன. இதில் புள்ளிமான்கள் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து 3 மான்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

3 deers killed in an accident

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே இருக்கிறது ரத்தினகிரி கிராமம். இங்கிருக்கும் காப்புக்காட்டில் வனவிலங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன. கோடை காலத்தில் தண்ணீர் மற்றும் இறை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வரும். தற்போது கோடைவெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் காட்டுக்குள் இருந்து வனவிலங்குகள் வெளி வரத்தொடங்கியுள்ளன.

3 deers killed in an accident

அவ்வாறு வெளிவந்த மூன்று புள்ளிமான்கள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளது.ஆற்காடு அருகே தென்னந்தியலம் பகுதியில் புள்ளிமான்கள் நேற்று இரவு கூட்டமாக வந்துள்ளன. சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை புள்ளிமான்கள் கூட்டம் கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவற்றின் மீது பயங்கரமாக மோதியுள்ளன. இதில் புள்ளிமான்கள் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து 3 மான்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

3 deers killed in an accident

இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ஆற்காடு வனசரக ஊழியர்கள் உயிரிழந்த மான்களின் உடல்களை மீட்டு கால்நடை மருத்துவர்களை மூலம் பிரேத பரிசோதனை செய்தனர். பின் அவற்றின் உடல்கள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. புள்ளிமான்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. வனத்திலிருந்து வெளியே வரும் வனவிலங்குகள் சமூக விரோதிகள், நாய்கள் உள்ளிட்டவற்றால் வேட்டையாடப்படுவதும், வாகனங்கள் அடிபட்டு இறப்பதும் தொடர்கதையாக இருப்பதாகவும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன் கி பாத்தில் ஒலித்த 'அவ்வையார்' பாடல்..! மீண்டும் தமிழை பெருமைபடுத்திய பிரதமர் மோடி..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios