Asianet News TamilAsianet News Tamil

பள்ளிக்கு சென்ற 10ம் வகுப்பு மாணவி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்பு; வேலூரில் பரபரப்பு

வேலூர் மாவட்டத்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பாத 10ம் வகுப்பு மாணவி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

10th standard student suspicious death at railway track in vellore district vel
Author
First Published Nov 21, 2023, 11:21 PM IST | Last Updated Nov 21, 2023, 11:21 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கார்த்திகேயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் மற்றும் நந்தினி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளையும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இதில் பெண் பிள்ளை குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி வீட்டுக்கு வராததால் பெற்றோர் குடியாத்தம் காவல் நிலையத்தில் பள்ளிக்குச் சென்ற தங்கள் மகள் காணவில்லை என புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை குடியாத்தம் அடுத்த குருநாதபுரம் என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் பெண்  சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல்துறையினர் பார்த்தபோது காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி என்பது தெரியவந்தது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக இருப்பது குறித்து குடியாத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவி ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுத்த சம்பவம் சக மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios