திருச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடத்திய இசை நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற பெண் காவல் ஆய்வாளரின் மகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பவுன்சர்கள் மீது திருவெறும்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம் அடுத்த மொராய் சிட்டி பகுதியில் அவ்வபோது திரை பிரபலங்களைக் கொண்டு பாட்டுக் கச்சேரிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 10ம் தேதி மாலை பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியை பார்க்க ஏராளமானோர் வருவதால் அவர்களை கட்டுப்படுத்த பவுன்சர்கள் பயன்படுத்தப்படுவது வழக்கம். அதன் படி யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியிலும் பவுன்சர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக முகமது ஹரிஷ் என்ற இளைஞர் தனது உறவினர்களுடன் சென்றுள்ளார். அவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வருகிறார். ஹரிஷின் தாயார் அஜீம் திருச்சி குற்ற காப்பகத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இசை நிகழ்ச்சியை பார்க்க வந்த ஹரிஷின் உறவினர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹரிஷ் கேள்வி கேட்டதற்கு அவர் மீது பவுன்சர்கள் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஹரிசை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை; காவல் துறையினர் விசாரணை

மேலும் இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பவுன்சர்கள் 10 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பழனியில் பள்ளிவாசல் அருகில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை