திருச்சி அருகே நீதிபதியின் கார் உள்பட அடுத்தடுத்து 4 கார்கள் மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், அவ்வழியாக வந்த மாவட்ட நீதிபதியின் கார் உள்பட 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. 

Trichy Chennai National Highway 4 vehicles collided in succession

திருச்சி மாவட்டம், நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கூத்தூர் மேம்பாலத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் நிலைத்தடுமாறிய இருசக்கர வாகனத்தில் சென்றவர் அதே திசையில் சென்ற அரசு வாகனத்தில் மோதி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  நடந்த இந்த விபத்தினால் அதே வழியில் வந்த தனியார் பள்ளி பேருந்து, மோட்டார் வாகன விபத்து காப்பீடு கோருதல் மாவட்ட நீதிபதி வாகனம், மற்றொரு கார் மற்றும் லாரி உள்ளிட்ட 4 வாகனங்கள் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.

பிளாஸ்டிக் கவருடன் கொதிக்க வைக்கப்பட்ட சாம்பார், ஈக்கள் மொய்த்த கறி - உணவக உரிமையாளரை அலறவிட்ட அதிகாரிகள்

இந்த விபத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்த பள்ளி மாணவர்களை மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

பொள்ளாச்சியில் 3வது முறையாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட மக்னா யானை

தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில், மற்றவர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios