திருச்சி அருகே தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரம்.. மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் திணறும் போலீசார்
திருச்சி அருகே தண்டவாளத்தில் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் மர்ம நபர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது லால்குடி அருகே வாளாடி ரயில் நிலையத்திற்கு அருகே வந்த போது தண்டவாளத்தின் நடுவே 2 லாரி டயர்கள் இருந்ததை கண்ட ஓட்டுநர், ரயிலின் வேகத்தை குறைத்த நிலையில் ஒரு டயர் தண்டவாளத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டது. மற்றொரு டயர் ரயில் என்ஜினில் மோதியதால் என்ஜினின் அடிப்பகுதியில் இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டதால் பழுது ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த ரயில்வே ஊழியர்கள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரயில் ஓட்டுநரின் சாதூர்ய செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து 40 நிமிடங்கள் தாமதாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட விவகாரத்தில் சதிச்செயல் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் சட்டென்று மாறிய வானிலை.. கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி..
இந்த சூழலில் 2-வது நாளாக சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித் குமார் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மர்ம நபர்களை பிடிக்க போதிய துப்பு கிடைக்காமல் தனிப்படை போலீசார் திணறி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய்களை கொண்டு தடயங்களை சேகரிக்கும் போலீசார் டயர்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரத்தில் மர்ம நபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தனிப்படை போலீசாரும் தண்டவாளத்தில் லாரி டயர்களை வைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டார கல்வி அலுவலர் காலியிடங்களுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு