திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் பலி; 2 மாணவர்களை தேடும் பணி தீவிரம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வேத பாடசாலையில் பயிலும் நான்கு சிறுவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கிய சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில் நீரில் மூழ்கிய மற்ற இரண்டு சிறுவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்.
திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஆண்டவன் வேத பாடசாலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களை சேர்ந்த சில மாணவர்களும் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர். வழக்கமாக அதிகாலை நேரங்களில் இங்கு பயிலும் மாணவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குழிக்க செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.
அந்த வகையில் நேற்று காலை யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற 13 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேலும் அச்சிறுவனுடன் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆந்திராவை சேர்ந்த அபிராம் (வயது 13), மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத் (வயது 14) ஆகியோரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்; பெண் பலி, 21 பேர் காயம்
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட கோபால கிருஷ்ணன் என்கிற சிறுவனை மட்டும் உயிருடன் மீட்டனர். தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.