கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்; பெண் பலி, 21 பேர் காயம்
கொடைக்கானலில் இருந்து பழனி வழியாக வந்த சுற்றுலா வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானார், 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோடை விடுமுறையையொட்டி குடும்பத்துடன் மன்னார்குடியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று நாட்கள் சுற்றுலாவாக மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு வந்த அவர்கள், கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு பழனி கோவிலுக்கு சென்று சாமி தரசினம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இதற்காக பழனி மலை சாலை வழியாக வந்து கொண்டிருந்த போது வேன் பாறையின் மீது மோதி ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக 100 பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து; பிரபல ரௌடி கைகள் சிதைந்து மருத்துவமனையில் அனுமதி
இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயனைப்பு துறையினர் ,மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் உதவியுடன் கயிற்றை கட்டி அனைவரையும் மேலே கொண்டு வந்து மீட்டனர். இதில் இரண்டு ஆண்கள், 16பெண்கள் , 3 குழந்தைகள் உட்பட காயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்கபட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தஞ்சாவூரை சேர்ந்த மார்யம்மாள் (45) பெண் ஒருவர் பலியானர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரியில் தொழிலதிபருக்கு கரப்பான் பூச்சி பிரியாணி பரிமாறிய பிரபல உணவகம்!