தொடரும் ஆம்னி பேருந்துகளின் அடாவடி..! அசுரத்தனமான கட்டணக்கொள்ளையால் அவதியில் மக்கள்..!
அண்மையில் தான் அரசு சார்பாக தனியார் பேருந்துகளில் வரம்பிற்கு மீறி கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச எண்ணும் போக்குவரத்துதுறை அறிவித்தது. இந்தநிலையில் தொடர் விடுமுறைகளில் போது தனியார் பேருந்து நிறுவனங்களின் கட்டண கொள்ளையை அரசு தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் வரும் 14ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க இருக்கிறது. 14ம் தேதி போகி பண்டிகையும், 15ம் தேதி தை பொங்கலும், 16ம் தேதி மாட்டுபொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாட சென்னை, கோவை போன்ற வெளி நகரங்களில் வசிக்கும் மக்கள் ஊருக்கு கிளம்பி செல்வார்கள். அதற்காக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும். தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களும் நிறைய பேருந்துகளை இயக்கும்.
பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகளின் போது தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுவது வழக்கமாக இருக்கிறது.இதை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும் கட்டணத்தை தனியார் பேருந்து நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். நாளை பொங்கல் திருநாள் தொடங்க இருக்கும் நிலையில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கு அரசு விரைவு பேருந்துகளில் 254 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும்நிலையில் தனியார் ஆம்னி பேருந்துகளில் தற்போது 1100 ரூபாய்க்கு மேலாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு அரசு விரைவு பேருந்துகளில் 402 ரூபாயும், தனியார் ஆம்னி பேருந்துகளில் 1300 , 1400 ரூபாய் அளவில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதை விட திருநெல்வேலி,தூத்துக்குடி போன்ற தென்மாவட்ட மக்கள் தான் அதிக சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். திருநெல்வேலி செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 1600 ,1800 மற்றும் 2000 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.
'மாவீரன் பிரபாகரனின்' முதல் பிறந்தநாள்..! உற்சாகமாக கொண்டாடிய சீமான் குடும்பம்..!
திருநெல்வேலி செல்லும் அரசு விரைவு பேருந்துகளின் கட்டணம் 519 ரூபாய் என்று இருக்கும்நிலையில் தனியார் பேருந்துகள் தாறுமாறாக உயர்த்தியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அண்மையில் தான் அரசு சார்பாக தனியார் பேருந்துகளில் வரம்பிற்கு மீறி கட்டணம் உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச எண்ணும் போக்குவரத்துதுறை அறிவித்தது. இந்தநிலையில் தொடர் விடுமுறைகளில் போது தனியார் பேருந்து நிறுவனங்களின் கட்டண கொள்ளையை அரசு தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
12 வயது சிறுமியிடம் அத்துமீறிய கிழவன்..! போக்சோவில் அதிரடி கைது..!