12 வயது சிறுமியிடம் அத்துமீறிய கிழவன்..! போக்சோவில் அதிரடி கைது..!
விழுப்புரம் அருகே பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருக்கிறது அருங்குறுக்கை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம்(53). கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டின் அருகே ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னும் 12 வயது சிறுமி வசித்து வருகிறார். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் சிறுமி 8 வகுப்பு படிக்கிறார்.
சம்பவத்தன்று அதிகாலையில் சிறுமி தெரு குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தார். தண்ணீர்குடத்துடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது சிறுமியை பின்தொடர்ந்து பன்னீர் செல்வம் வந்துள்ளார். ரேவதியிடம் பேச்சுக்கொடுத்த அவர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி அதிர்ச்சியில் கூச்சல் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்களிடம் நடந்தவற்றை சிறுமி கூறியுள்ளார். அதற்குள் அங்கிருந்து பன்னீர்செல்வம் சென்றுவிட்டார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் பன்னீர் செல்வதை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.