பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் முன்பே சர்ச்சையை கிளப்பிய திருச்சி சூர்யா; மேட்டர் இதுதான்..

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

Loksabha Elections 2024 :If rama srinivasan contest in trichy Bjp will loose depsosit says trichy surya Rya

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு முடிந்துள்ள நிலையில் வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் திமுக வெளியிட்டுள்ளது.

அதே போல் அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதே போல் பாஜக கூட்டணியில் பாமக, தாமக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில் நாளைக்குள் தொகுதி பங்கீடு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விருதுநகர் தொகுதியில் களமிறங்கும் கேப்டன் மகன்; விருப்ப மனுவை தாக்கல் செய்தார் விஜயபிரபாகரன்

மற்ற மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவில் சீட் பெற பலரும் முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையை சேர்ந்த ராம ஸ்ரீனிவாசன் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராம சீனிவாசனை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

மீண்டும் பாஜக.. அரசியல் களத்தில் அதிரடியாக இறங்கிய தமிழிசை-ஆரத்தழுவி வரவேற்ற அண்ணாமலை

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் முன்பே பாஜக நிர்வாகி திருச்சி சூர்யாசர்ச்சையை கிளப்பி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர் “ வேடந்தாங்கல் பறவை வேண்டா என்ற தலைப்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் அறிமுகம் இல்லாத வெளிமாட்டத்தை சேர்ந்த ராம சீனிவாசனை களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.. இப்படி பாஜகவின் உண்மை தொண்டன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios