மீண்டும் பாஜக.. அரசியல் களத்தில் அதிரடியாக இறங்கிய தமிழிசை-ஆரத்தழுவி வரவேற்ற அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில், இரண்டு மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்திரராஜன், இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். பாஜக தலைமை அலுவலம் வந்தவரை பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.
 

Tamilisai resigned from the post of governor and rejoined the BJP KAK

மீண்டும் அரசியல் களத்தில் தமிழிசை

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுட்டுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் இறுதிகட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழக பாஜகவை பொறுத்தவவரை தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துள்ளது. இன்று அல்லது நாளைக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்த சூழ்நிலையில் பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை பாஜக அரசு வழங்கியது. 

Tamilisai resigned from the post of governor and rejoined the BJP KAK

ஆரத்தழுவி வரவேற்ற அண்ணாமலை

கடந்த 4 வருடமாக இரு மாநில ஆளுநராக இருந்த தமிழிசை தனது பதவியை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இதனையடுத்து இன்று மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் வந்த தமிழிசையை பாஜகவினர் உற்சாகமாக வரவேற்றனர். இதனையடுத்து அவரை ஆ,ரத்தழுவி அண்ணாமலை வரவேற்றார். இதனை தொடர்ந்து தமிழிசைக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ’’பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார். கஷ்டமான முடிவை எடுத்தாலும் இஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Tamilisai resigned from the post of governor and rejoined the BJP KAK

அரசியலில் வெற்றி கிடைக்குமா.?

இதனிடையே அரசியல் களத்தில் 2006, 2011, 2009 மற்றும் 2019 தேர்தல்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த தமிழிசை, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் அரசியல் களத்தில் இறங்கியிருப்பது பாஜகவினர் மட்டுமில்லாமல் அரசியல் வட்டாரமே அதிர்ச்சியாக பார்க்கிறது. 4 தேர்தல்களில் கையை விட்ட தேர்தல் களம் 2024ல் தமிழிசைக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.  

இதையும் படியுங்கள்

DMK Candidate List திமுக வேட்பாளர்கள் பட்டியல்: யார் யார் எங்கு? புதியவர்களுக்கு வாய்ப்பு; முழுவிவரம் இங்கே!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios