மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்; அரசுக்கு எதிராக சீறும் சீமான்
திருச்சியில் மின்வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த பெரியசாமியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இலப்பீடு வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பேரூர் கிராமத்தில் சரிசெய்யப்படாமல் அறுந்து கிடந்த உயரழுத்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அன்புத்தம்பி பெரியசாமி அவர்கள் உயிரிழந்ந செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேனையும் அடைந்தேன். தம்பி பெரியசாமியை இழந்து பெருந்துயரத்திற்குள்ளாகியுள்ள அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது குறித்து புகாரளித்தும் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், விரைந்து சரி செய்வதற்கான எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாத தமிழ்நாடு மின்வாரியத்தின் அலட்சியப்போக்கே தம்பி பெரியசாமி மின்விபத்துக்குள்ளாகி உயிரிழக்க முதன்மைக் காரணமாகும்.
ரூ.26 ஆயிரம் கடனுக்காக 100 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆகவே, தமிழ்நாடு அரசு தம்பி பெரியசாமியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்று இரண்டு குழந்தைகளோடு தவிக்கும் பெரியசாமியின் மனைவிக்கு அரசு வேலையும், 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.