Asianet News TamilAsianet News Tamil

ரூ.26 ஆயிரம் கடனுக்காக 100 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி

ஆந்திரா மாநிலத்தில் ரூ.26 ஆயிரம் கடனுக்காக கூலித் தொழிலாளி ஒருவர் 100 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

In Andhra, a laborer tried to commit suicide because he couldn't pay his debt vel
Author
First Published Oct 14, 2023, 7:25 PM IST

ஆந்திரா மாநிலம் சத்திய சாய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இராணா. கூலி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ராணா குடும்ப தேவைக்காக ரூ.26 ஆயிரம் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. 26 ஆயிரம் ரூபாய்க்கு வட்டி, வட்டிக்கு வட்டி என்று கணக்கு போட்டு மொத்தம் ஒன்றரை லட்ச ரூபாய் திருப்பி கொடுக்க வேண்டும் என்று அந்த உரிமையாளர் இராணாவை வற்புறுத்தி இருக்கிறார்.

அவ்வளவு பெரிய தொகையை திருப்பி செலுத்த வசதி வாய்ப்பு இல்லாத அவர் வேறு வழியில்லாமல் அங்குள்ள  100 அடி உயர கட்டவுட் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராணாவை சமாதானப்படுத்தி மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எங்கே செல்லும் இந்த பாதை; 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 17 வயது சிறுவன் - அரியலூரில் பரபரப்பு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஆனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த ராணா கீழே குதித்தார். அப்போது மின்சார வயர் மீது விழுந்த இராணா கடை ஒன்றின் மீது விழுந்தார். கடை மீது விழுந்து காயமடைந்த இராணாவை மீட்ட தீயணைப்பு படையினர் அவரை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள தர்மாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios