Asianet News TamilAsianet News Tamil

மண்டை ஓடுகளுடன் திடீரென செல்போன் டவரில் ஏறி போராடிய விவசாயிகள்; திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் விளை பொருட்களுக்கு போதிய விலை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் செல்போன் கோபுரம் மீது ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

farmers protest against central government in trichy vel
Author
First Published Feb 13, 2024, 6:06 PM IST

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சிக்னலில் மறியல் ஈடுபட்டனர். அப்போது இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் எல்லோரும் சுதந்திரமாக வாழும் இந்தியாவில் விவசாயிகளை மட்டும் அடிமைகளாக நடத்துவது நியாயமா?

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்; திமுக வாக்குறுதியை சுட்டிக்காட்டி விவசாயிகள் போராட்டம்

அரசு ஊழியர்களுக்கும், மற்றவர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கும் தாங்கள் 140 கோடி மக்கள் தொகையில் 90 கோடி விவசாயிகளுக்கு மட்டும் எந்த உதவிம் செய்யாமல் இருப்பது நியாயமா? அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது பெருமைக்குரியது தான். அதை கும்பிடும் விவசாயிகள் 90 கோடி பேர்களுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் வஞ்சிப்பது நியாயமா?

நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்

மோடி ஐயா விவசாயிகள் ஓட்டு தங்கள் கட்சிக்கு வேண்டாமா அல்லது ஓட்டு இயந்திரத்தை மாற்றி ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற எண்ணமா என மண்டை ஓடுகளுடன் கோஷமிட்டு  சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் சிலர் திடீரென அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செல்போன் டவரில் ஏரியும், சாலை  மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios