Asianet News TamilAsianet News Tamil

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய்; திமுக வாக்குறுதியை சுட்டிக்காட்டி விவசாயிகள் போராட்டம்

தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers protest against dmk government for need to sell a coconut oil through ration shops in tamil nadu in dharmapuri vel
Author
First Published Feb 13, 2024, 5:13 PM IST

தி.மு.க, அரசின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக விவசாயிகளிடம் தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அது நிறைவேற்றப்படவில்லை. தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. 

வெளி நாடுகளில் இருந்து 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், உள்நாட்டு எண்ணெய் வகைகளான கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை ஊக்கப்படுத்தாமல் அரசு இந்தோனேஷியா, மலேசியா நாடுகளில் இருந்து மாதம் 1 கோடியே 96 லட்சம் லிட்டர் பாமாயிலை லிட்டர் ரூ.100க்கு இறக்குமதி செய்கிறது.

நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்

இதில் லிட்டருக்கு ரூ.70 மானியமாக வழங்கப்படுகிறது. நியாய விலை கடைகளில் ரூ.30க்கு பாமாயில் விற்கப்படுகிறது. மக்களின் வரி பணத்தில் ரூ.1500 கோடி பாமாயில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்போது 10 ரூபாயாக குறைந்து விட்டது. பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்களை தமிழக அரசு கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். 

கேப்டன் விஜயகாந்த் புதைக்கப்படவில்லை; விதைக்கப்பட்டுள்ளார் - தொண்டர்கள் மத்தியில் விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி பேச்சு

இதனை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் மணி, பழனியப்பன், செயலாளர் முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து தருமபுரி, சேலம் சாலையில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios