திருச்சி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 22 மாணவ மாணவர்கள் காயம்
திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த 22 மாணவ, மாணவிகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், துப்பாக்கி தொழிற்சாலை அருகே கேந்திரய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளிக்கு 22 மாணவ, மாணவிகளை ஏற்றுக்கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திருச்சி மாவட்டம் மாத்தூர் அடுத்துள்ள குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த மாணவ, மாணவிகள் 22 பேரும் காயம் அடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் அவர்கள் அனைவரையும் மீட்டனர். ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் காயம் அடைந்த மாணவ, மாணவிகளை அப்பகுதி மக்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை ஓரமாக நடந்து சென்றவர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி; பொதுமக்கள் போராட்டம்
வழக்கமாக வரும் ஓட்டுநர் இன்று விடுப்பு எடுத்த காரணத்தால் மாற்று ஓட்டுநர் அந்த வேனை ஓட்டி வந்துள்ளதாகவும், குறுகியலான பகுதியில் வேகமாக வேனை இயக்கியதால் அங்கிருந்த பள்ளத்தில் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து மாத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்களின் வாழ்வியலை கீழடி அருங்காட்சியகம் பிரதிபலிக்கிறது - அமைச்சர் பெருமிதம்