சாலை ஓரமாக நடந்து சென்றவர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலி; பொதுமக்கள் போராட்டம்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே காலை உணவு சாப்பிடுவதற்காக கடைக்கு சாலை ஓரமாக நடந்து சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த அமினாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர் காலை உணவு சாப்பிடுவதற்காக செந்துறை சாலையில் ராம்கோ சிமெண்ட் ஆலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாகனம் எதிர்பாராத விதமாக அவர் மீது பலமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் விபத்து ஏற்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வாகனத்தை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழர்களின் வாழ்வியலை கீழடி அருங்காட்சியகம் பிரதிபலிக்கிறது - அமைச்சர் பெருமிதம்
மேலும் மினி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். செந்துறை - அரியலூர் இடையே சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வரும் நிலையில், சாலையின் இருபுறங்களிலும் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பொருட்படுத்தாமல் வாகனங்கள் வழக்கம்போல் வேகமாக வருவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகைகளை அடகு வைத்து குடித்த கணவரால் மனமுடைந்த இளம் பெண் விபரீத முடிவு
மேலும் பொதுமக்கள் மேற்கொண்ட சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.