ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் போட முடியாது... ஜூலை 1ம் தேதி முதல் அதிரடி அமல்..!

ஜூலை 1 ம் தேதி முதல் ஹெல்மெட் போடாமல் சென்றால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்பபொபடாது என்கிற விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது. 
 

You can not put petrol without helmet

ஜூலை 1 ம் தேதி முதல் ஹெல்மெட் போடாமல் சென்றால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்பபொபடாது என்கிற விதிமுறை அமலுக்கு வர இருக்கிறது.

 You can not put petrol without helmet

இந்திய அளவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதுதான்.இந்நிலையில், அஸாம் மாநிலம் தேஜ்பூரில் மாவட்ட சாலை பாதுகாப்புக் குழுவின் கூட்டம் நேற்று துணை ஆணையர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிரான சட்டத்தை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டது, You can not put petrol without helmet

மேலும் நிர்வாகம் ஜூலை 1ம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் 'ஹெல்மெட் இல்லை, எரிபொருள் இல்லை' என்ற விதிமுறையை அமல்படுத்தும். துணை ஆணையர் டி.டி.ஓவிடம் உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் மற்றும் எரிபொருள் பம்புகளுக்கும் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது.

மாவட்டத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளின் பின்னணியில் உள்ள காரணங்களை அடையாளம் காண கூட்டு சரிபார்ப்புக் குழுவை அமைக்குமாறு துணை ஆணையர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.You can not put petrol without helmet

தமிழகத்தில் 2018-ல் நடந்த சாலை விபத்துகளில் 11, 266 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 50 சதவிகித உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டியதால் நிகழ்ந்ததாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசும் போக்குவரத்துக் காவல்துறையும் ஹெல்மெட் அணிவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தும் பெரும்பாலானோர் அலட்சியமாகவே இருந்து வருகிறார்கள். தமிழகத்திலும் இதுபோன்ற திட்டத்தை அமல் படுத்த காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios