தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... நடிகர் ரஜினியிடம் விசாரணை..? ஆணைய வழக்கறிஞர் அதிரடி பதில்!
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தார்கள். இதுதொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
தேவைப்பட்டால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியிடம் விசாரணை நடத்தப்படும் என்று விசாரணை ஆணைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தார்கள். இதுதொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரித்துவரும் நிலையில், தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் கடந்த ஓராண்டாக 13 கட்ட விசாரணைகளை நடத்தியிருக்கிறது. 366 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் அருணாஜெகதீசன் தலைமையில் 14-வது கட்ட விசாரணை நடைபெற்றுவந்தது. விசாரணை இடையே ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆணைய விசாரணை பற்றி பல தகவல்களைப் பகிர்ந்து கொண்ட அவரிடம், நடிகர் ரஜினிகாந்தை விசாரணைக்கு அழைப்பீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர், “தேவைப்பட்டால் இந்தச் சம்பவம் தொடர்பாக விவரம் அறிந்தவர்களை அழைத்து விசாரணை செய்வோம். சமூக செயற்பாட்டாளர் முகிலன் சார்பில் ஒரு சி.டி. தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே அவரிடமும் விசாரணை நடத்துவோம்” என்றுதெரிவித்தார்.
.
தூத்துக்குடி சம்பவத்துக்குப் பிறகு அங்கே சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த நடிகர் ரஜினி காந்த், “தூத்துக்குடி சம்பவத்துக்கு சமூக விரோதிகள்தான் காரணம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புகளையும் எரித்தது பொதுமக்கள் இல்லை; சமூக விரோதிகளே” என்று பரபரப்பாகப் பேட்டியளித்தார்.