மறக்க முடியாத துயரம்... துப்பாக்கிச்சூடு நினைவு தினம்... தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு ..!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து இன்று ஓராண்டு நிறைவடைகிறது. துாத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லெட் தாமிர ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் 100-வது நாளான கடந்த ஆண்டு மே 22-ம் தேதி, போராட்டக்காரர்கள் துாத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து போலீசார், துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.
இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் பலத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து இன்று ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் துாத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக நேற்று பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தென்மண்டல ஐஜி சண்முகராஜேசுவரன் தலைமையில் நடந்தது.