Asianet News TamilAsianet News Tamil

ஆடி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர்   தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை வழிபட்டனர்.

thousands of devotees took a bath at tiruchendur sea
Author
First Published Aug 16, 2023, 9:47 PM IST

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற  திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கடற்கரையில்  தங்களுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ஆடி, தை  அம்மாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவதால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், ஆண்டு முழுவதும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது. 

அந்த வகையில் சென்னை,  கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு எள், அன்னம்,   தர்ப்பபுள் வைத்து பிண்டம் வளர்த்து வேத மந்திரங்களை முழங்கி  தர்ப்பணம் கொடுத்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர்.

ஜெயிலர் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கி ரஜினி ரசிகர்களை மாநாட்டிற்கு அழைத்த கடம்பூர் ராஜூ

அதனைத்தொடர்ந்து கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும்  ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று  அதிகாலை 4-00  மணிக்கு  கோவில் நடை திறக்கப்பட்டது . தொடர்ந்து  04-30  மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 6-00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத்தொடரந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்ததால் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios