Asianet News TamilAsianet News Tamil

வாலிபரை காரில் கடத்தி கொடூரமாக கொலை செய்த அதிமுக பிரமுகர்... உடனே நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ், இபிஎஸ்..!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

thoothukudi youth murdered case..aiadmk party arrest..ops, eps action
Author
Thoothukudi, First Published Sep 21, 2020, 2:16 PM IST

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கில் தொடர்புடைய திருமணவேல் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சொக்கன்குடியிருப்பைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 17ம் தேதி ஒரு கும்பல் காரில் கடத்தி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக பிரிவு அதிமுக செயலாளர் திருமணவேல் உள்ளிட்ட 6 பேர் மீது திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இவர்களில் முத்துராமலிங்கம், சின்னத்துரை, ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருமணவேல், சுடலைக்கண் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருவரும் சரணடைந்தனர். இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து  திருமணவேல் விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

thoothukudi youth murdered case..aiadmk party arrest..ops, eps action

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமணவேல் வர்த்தக அணிச்செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். 

thoothukudi youth murdered case..aiadmk party arrest..ops, eps action

கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios