தொடர் குழந்தை கடத்தலுக்கு முற்று புள்ளி; 1 குழந்தையை தேடி சென்ற போலீசுக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த கொள்ளையன்
தூத்துக்குடியில் கடத்தப்பட்ட 1 குழந்தையை தேடி சென்ற காவல் துறையினர் ஒரே கும்பலிடம் இருந்து 4 குழந்தைகளை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி, வேலூரை சேர்ந்த சந்தியா என்ற கணவனால் கைவிடப்பட்ட இளம்பெண் அந்தோணியார் கோயில் பகுதி அருகே சாலையில் வசித்து யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர் தனது 4 மாத பெண் குழந்தையுடன் கடந்த 9ம் தேதி அதிகாலை சாலை ஓரத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் 4 மாத பெண் குழந்தையை தூக்கி கடத்திச் சென்றார்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் இது தொடர்பாக, சந்தியா தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வந்தனர். மேலும், குழந்தை கடத்தல் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
எதிரிகளை தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு கடந்து செல்வேன்; தமிழிசை அதீத நம்பிக்கை
இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் காவல்துறையினர் சார்பில் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தெரிவிப்பவர்களுக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர். இந்தநிலையில், நேற்று முன் தினம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சாமி (எ) கருப்பசாமி ( 47), என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (எ) ராஜா (53) என்பவரையும் நேற்று கைது செய்தனர்.
அப்போது, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகின. இது தொடர்பாக, தென் மண்டல ஐஜி கண்ணன், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஐஜி கண்ணன் கூறுகையில், சமீப காலமாக குழந்தைகளை கடத்துவதாக புகார் வந்த நிலையில், காவல்துறை பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். குற்றவாளிகள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கக்கூடிய குழந்தைகள், சாலை ஓரத்தில் இருக்கக்கூடிய குழந்தைகள், கோவிலில் இருக்கக்கூடிய குழந்தைகள், தனியாக இருக்கக்கூடிய குழந்தைகளை கடத்தியுள்ளனர்.
ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா; பெரம்பலூரில் மாறுவேடத்தில் வாக்கு சேகரித்த திமுக பிரமுகர்
இதில், கடந்த 21-01-2022 அன்று திருச்செந்தூர் கோவிலில் வைத்து நெல்லை சுத்தமல்லியை சார்ந்த குழந்தை முத்துபேச்சி, (2 ½) மற்றும் 21-10-2023 அன்று குலசை கோவிலில் காணமல் போன மதுரையை சார்ந்த அண்ணாமலையின் மகள் கார்த்திகைசெல்வி (2), மற்றும் புகார் அளிக்காத ஒரு குழந்தை உட்பட 4 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை காணவில்லை என்று சமூக வலைதளத்தில் தேவையில்லாத புரளி கிளம்பி உள்ளது. அதில் எந்த உண்மையும் இல்லை. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
மேலும், ஒரு குழந்தையை காணவில்லை என்று தேடி போன போது எங்களுக்கோ 4 குழந்தைகள் கிடைத்தது. இது எங்களுக்கே ஒரு சர்ப்ரைஸ் தான். மேலும், இந்த நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு குழந்தை அப்பா, அம்மா யார் என்று தெரியவில்லை. குழந்தைகளை கடத்தியது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணாநகர் தெருவைச் சேர்ந்த நாகப்பன் மகன் சாமி (எ) கருப்பசாமி ( 47), ஆலங்குளம் கரும்பனூர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (எ) ராஜா (53) என்பவரையும் கைது செய்துள்ளோம்.
இவர்கள் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்று உள்ளனர். குழந்தைகளை விற்கும்போது, மலைப்பகுதியில் இருந்ததாகவும், பேரன்ட்ஸ் கஷ்டப்படுகிறார்கள். குழந்தை வளர்க்க முடியவில்லை. அதனால் குழந்தையை. விற்கிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் மீட்கப்பட்ட 4 குழந்தைகளையும் ‘குழந்தைகள் நல குழு” (Child Welfare Committee) மூலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், குழந்தை காணவில்லை என்றால் வதந்தியாக பரப்பாமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். காவல்துறை உண்மை தன்மையை விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பர். மேலும், குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றார்.