சினிமாவில் அத்திபட்டி! நிஜத்தில் மீனாட்சிபுரம்! ஒரு ஆளில்லா கிராமம்! எந்த மாவட்டத்தில் இருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற ஒரு கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அதுபோல நிஜத்திலும் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போகும் விளிம்பில் தமிழ்நாட்டில் ஒரு கிராமம் உள்ளது. 

Thoothukudi meenakshipuram is an uninhabited village tvk

தண்ணீர் தட்டுப்பாடு, வேலையின்மை காரணமாக மக்கள் ஊரை விட்டு சென்ற நிலையில் ஒரே ஒரு முதியவர் இருந்த நிலையில் அவரும் உயிரிழந்ததை அடுத்து தமிழ்நாட்டில் ஆளில்லா கிராமமானது மீனாட்சிபுரம். 

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற ஒரு கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அதுபோல நிஜத்திலும் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போகும் விளிம்பில் தமிழ்நாட்டில் ஒரு கிராமம் உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்டது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர்.

Thoothukudi meenakshipuram is an uninhabited village tvk

குறிப்பாக தண்ணீர் தட்டுப்பாடு, வேலையின்மை, விவசாயம் பொய்த்து போனது என முக்கிய காரணங்களாக கூறலாம். குடி தண்ணீருக்காக  5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். இதனால் வேறு வழியில்லாமல் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, ஊரை காலி செய்து வெளியூர்களுக்கு சென்று குடியேறிவிட்டனர். 

Thoothukudi meenakshipuram is an uninhabited village tvk

கடைசியாக மீனாட்சிபுரம் கிராமத்தில் முதியவர் கந்தசாமி  (75) மட்டுமே அந்த கிராமத்தில் வசித்து வந்தார். மேலும் கந்தசாமி சாகும் வரை அங்கேயே இருப்பேன் என பிடிவாதமாக வாழ்ந்து வந்த நிலையில் இயற்கை எய்தியுள்ளார். இவரின் இறப்புக்கு வந்த மீனாட்சிபுரம் வந்த கிராம மக்கள் இனி அங்கே வாழப்போவதாக தெரிவித்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios