கடந்த 5 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்த கனிமொழியின் சொத்து மதிப்பு; பிரமாணபத்திரத்தில் வெளியான தகவல்
தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் அசையும் சொத்து மதிப்பு சுமார் 17 கோடி அளவு உயர்ந்துள்ளது. அதேபோன்று ஆசையா சொத்து மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்ட வகையில், அசையும் சொத்தாக 38 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 ரூபாய் இருப்பதாகவும், அசையா சொத்தாக 18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
மாப்பிள்ளை வீடு, பொண்ணு வீடுனா சண்டை இருக்க தான் செய்யும் பெருசு பண்ணாதீங்க; அண்ணாமலை அன்பு கட்டளை
கடந்த முறை தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் போது கனிமொழி எம் பி தனது பிரமாண பத்திரத்தில் தனக்கு அசையும் சொத்தாக 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 369 ரூபாய் அளவு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும் அசையா சொத்தாக ரூபாய் 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அளவு அசையா சொத்து இருப்பதாக தாக்கல் செய்திருந்தார்.
அம்மாவின் மரணத்திற்கு ஓ.பி.எஸ். தான் காரணம்; உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு
தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக எம்பி கனிமொழியின் சொத்து பட மடங்கு உயர்ந்து அதாவது சுமார் அசையும் சொத்துக்கள் மதிப்பு சுமார் ரூபாய் 17 கோடி ரூபாய் அளவிலும், ஆசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் 10 கோடி அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஐந்து ஆண்டுகளில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பல மடங்கு அதாவது சுமார் 27 கோடி அளவுக்கு கனிமொழியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.